மைசூரு தசாரா (கோப்புப்படம்) 
செய்திகள்

மைசூரு தசரா பண்டிகை: மிகக் குறைந்த நபர்களுக்கே அனுமதி

தசரா பண்டிகையின்போது குறைவான மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் அரண்மனையில் ஆண்டுதோறும் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். தசரா பண்டிகையின்போது 10 நாட்களும் மைசூர் அரண்மனையில் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை காண்பதற்காக லட்சக்கணக்கில் மக்கள் வருகை தருவார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக மைசூர் தசரா விழாவை கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என டெக்னிக்கல் கமிட்டி கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

பரிந்துரையில் யானை சவாரி மிகவும் ஆடம்பரமாக நடைபெறும். இதை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசிப்பர். இந்த முறை 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் 200 பேர் மட்டுமே கலந்த கொள்ள அனுமதி.

மைசூர் அரண்மனையில் நடைபெறும் கலை விழாவில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள பரிந்துரை செய்துள்ளது. மைசூருவை சுற்றியுள்ள கலைஞர்களுக்கு அனுமதி, ஆனால் வெளிமாநில, நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT