குழந்தை 
செய்திகள்

திருப்பூரில் 14 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை மர்ம மரணம்

திருப்பூரில் 14 வயது சிறுமியிடம் வட மாநில வாலிபர் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததில் அவர் குழந்தை பெற்றார். அக்குழந்தை மர்மமாக இறந்துள்ளது.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் விஜயாபுரத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு தங்கியிருந்த 14 வயது சிறுமியிடம் வடமாநில வாலிபர் காதலிப்பதாகவும், திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இதனால் சிறுமி கர்ப்பமானார். 

இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலை மறைவான வாலிபரை தேடி வருகிறார்கள். 

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின்னர் சிறுமி, குழந்தையுடன் வீடு திரும்பினார். 4 மாதங்களாக சிறுமி தனது குழந்தையை பராமரித்து வந்தார். 

இந்தநிலையில் நேற்று குழந்தை திடீரென மர்மமான முறையில் இறந்து விட்டது. இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.