மனப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 45 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில் கடினமான பாறையை உடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சுர்ஜித்தை மீட்கும்பணி எந்த சூழ்நிலையிலும் கைவிடப்படமாட்டாது என வருவாய் நிர்வாக ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் ’வீரமிக்க சிறுவன் சுர்ஜித் வில்சனுடன் எனது பிரார்த்தனைகள் இணைந்துள்ளது. அவனை ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்பான நிலவரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். சிறுவனை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன’ என தெரிவித்துள்ளார்.