செய்திகள்

ஜனாதிபதியாக எனது கடைசி பயணம் கொல்கத்தாவுக்கு - பிரனாப் முகர்ஜி நெகிழ்ச்சி

ஜனாதிபதி பதவிக்காலத்தில் கடைசி பயணமாக கொல்கத்தா வந்துள்ளதாக அடுத்த மாதத்துடன் ஓய்வு பெற இருக்கு பிரனாப் முகர்ஜி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கொல்கத்தா:

தற்போதைய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி இன்று மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் இந்திய புள்ளியியல் நிறுவனத்திதில் நடைபெற்ற பி.சி மஹாலானோபிஸ் அவர்களின் 125-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். விழாவில் பேசிய பிரனாப் முகர்ஜி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், “ஜனாதிபதி பதவிக்காலத்தில் கடைசி பயணமாக கொல்கத்தா வந்துள்ளதாக” என தனது பேச்சில் பிரனாப் முகர்ஜி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரனாப் முகர்ஜி அம்மாநில அரசியலில் கோலோச்சி பின்னர் தேசிய அரசியலுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.