செய்திகள்

முசாபர்பூர் சிறுமியர் காப்பக கற்பழிப்பு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பீகார் மாநிலத்தின் முசாபர்பூரில் தொண்டு நிறுவன விடுதியில் தங்கியிருந்த சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

பீகார் மாநிலத்தின் முசாபர்பூரில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் காப்பகம் ஒன்று இயங்கி வந்தது.

இங்கு தங்கி இருந்த ஏராளமான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக காப்பக நிர்வாகி பிரஜேஷ் தாகூர் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உள்ள வெளிநபர்களின் தொடர்பு உள்பட அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் முன்னர் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இவ்விவகாரத்தில் முழுமையான அறிக்கை  தாக்கல் செய்ய ஆறுமாத காலம் அவகாசம் தேவை என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.