விபத்து 
செய்திகள்

முத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலி

முத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி கூலி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

முத்தூர்:

முத்தூர் அருகே உள்ள குழலி பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). சுமை தூக்கும் கூலித் தொழிலாளி.

நேற்று இரவு மாரிமுத்து முத்தூர் - காங்கேயம் ரோட்டில் தனியார் மில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக முத்தூரை அடுத்த கரையூரை சேர்ந்த சம்பத்குமார் (28) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக சம்பத்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மாரிமுத்து மீது மோதியது.

இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அந்த வழியாக வந்தவர்கள் இது குறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரையும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் மாரிமுத்து வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். படுகாயமடைந்த சம்பத்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.