முத்தூர்:
முத்தூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்குட்பட்ட முத்தூர் கடைவீதி, பஸ் நிலையம், ஈரோடு சாலை, வெள்ளகோவில் சாலை, காங்கேயம் சாலை, கொடுமுடி சாலை, நத்தக்காடையூர் சாலை, சக்கரபாளையம், புதுப்பாளையம், செங்கோடம்பாளையம், வேலாயுதம்பாளையம், சின்னமுத்தூர், ஊடையம், தொட்டியபாளையம், மேட்டுக்கடை, கரட்டுப்பாளையம், மலையத்தாபாளையம், ஆலாம்பாளையம், முத்துமங்களம், வேலம்பாளையம், ரங்கப்பையன்காடு, முத்துக்கவுண்டன்வலசு, வள்ளியரச்சல், மேட்டாங்காட்டுவலசு, அமராவதிபாளையம், முருகம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை காங்கேயம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.