செய்திகள்

முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது

மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் பிடிப்பட்டது முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பேட்டையை அடுத்த செம்படவன் காடு பகுதியில் 4 வாலிபர்கள் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர். 

அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் திருடிய 4 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

போலீசாரின் விசாரணையில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்கள் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த மன்சூர் அலிகான், சபீர் அகமது, சுப்ரீம் என்று தெரியவந்தது. 19 வயதான இவர்கள் 3பேரும் வாகன திருட்டில் ஈடுபட்டு அதில் கிடைத்த பணத்தை மது குடிக்கவும், தவறான செயல்களுக்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். 

மோட்டார் சைக்கிள் திருடர்கள் பிடிப்பட்டது முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.