செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதம் வகுப்புவாத சக்திகளை ஊக்கப்படுத்தும்- முத்தரசன்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது மதரீதியான கலவரத்தை உருவாக்கும் என்று முத்தரசன் கூறினார். #SrivilliputhurJeeyar #mutharasan

மாலை மலர்

திருவாரூர்:

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி தெரிவித்த கருத்துக்கு அவர் உரிய விளக்கம் கொடுத்தார். மேலும் தனது கருத்து யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தமும் தெரிவித்தார்.அதற்கு பின்னரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது மதரீதியான கலவரத்தை உருவாக்கும். அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடும் வகுப்புவாத சக்திகளுக்கு ஊக்கம் கொடுக்கும்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது தர்மயுத்தம் முடிந்து விட்டது என கூறியுள்ளார். அதில் என்ன பிரச்சினைகளை முன்வைத்தார். அந்த பிரச்சினைகளில் எவை தீர்க்கப்பட்டு உள்ளது என்பதை அவர் மக்களுக்கு விளக்க வேண்டும். தர்மயுத்தம் என்பது கபட நாடகம்.தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது. இதில் அரசு தேர்வுகளில் போட்டி தேர்வு நடத்தப்பட்டு பின்னர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படும் போது அவர்களிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை பெறப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #SrivilliputhurJeeyar