செய்திகள்

முஸ்லிம் பெண்கள் இனி ஆண்கள் துணை இல்லாமல் ஹஜ் யாத்திரைக்கு செல்லலாம்: பிரதமர் மோடி

ஹஜ் யாத்திரைக்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் இனி ஆண்கள் துணையின்றி செல்லலாம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மாலை மலர்

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மக்களுடன் கலந்துரையாடும் விதமாக மன் கி பாத் நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசி வருகிறார். இந்த ஆண்டின் இறுதியை மன் கி பாத் நிகழ்ச்சியுடன் நிறைவு செய்த மோடி, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஹஜ் யாத்திரைக்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் ஆண்கள் துணையுடன் தான் செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்படி 45 வயதிற்கு மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் இனி ஆண்கள் துணையின்றி ஹஜ் யாத்திரை செல்லலாம்.

இது குறித்து மோடி மேலும் பேசுகையில், '1300 முஸ்லிம் பெண்கள் ஆண்கள் துணையின்றி ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். நாட்டின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த முஸ்லீம் பெண்களும் ஹஜ் யாத்திரைக்கு செல்கின்றனர். அவர்களுடன் ஒரு ஆண் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த கட்டுப்பாடு தொடரப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லீம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இனி முஸ்லிம் பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரைக்கு செல்லலாம்

வழக்கமாக, ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால், பெண்களுக்கு அதில் இருந்து விலக்கு அளிக்கும் படியும், அவர்களை சிறப்பு பிரிவில் அனுமதிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளேன்' என  கூறினார்.

#TamilNews