லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் எம்.எல்.சி.யாக இருந்து வருபவர் புக்கால் நவாப் (64). இவர் சமாஜ்வாடி கட்சியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்தவர்.
லக்னோவில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சென்றார் நவாப். இதையடுத்து, அனுமன் கோவிலுக்கு சுமார் 30 கிலோ எடையுள்ள பெரிய மணியை நேற்று தானமாக கொடுத்துள்ளார்.
இதுகுறித்து புக்கால் நவாப் கூறுகையில், அனுமன் கோவிலுக்கு மணி வழங்கியது எனக்கு மன மகிழ்ச்சியை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
ஆனால், தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவர் அனுமன் கோவிலுக்கு மணி கொடுத்துள்ளார் என சமாஜ்வாடி கட்சி தலைவர்களில் ஒருவரான ராம் கோவிந்த் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே, அயோத்தியில் ராமர் கோவில் அமைய வேண்டும் என வலியுறுத்தி வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews