ஆர்ப்பாட்டம் 
செய்திகள்

முசிறி, உப்பிலியபுரத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

முசிறி, உப்பிலியபுரத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முசிறி:

முசிறியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பண்டிகை காலத்தையொட்டி முன்பணம் வழங்க வேண்டும். தீபாவளி போனசை தாமதமின்றி வழங்க வேண்டும். 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல, உப்பிலியபுரம் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யூ. சங்கத் தலைவர் சோமசுந்தரம், எல்.பி.எப். சங்கத்தலைவர் பழனியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

SCROLL FOR NEXT