மும்பை:
பெங்களூரை சேர்ந்தவர் கரன் ஜோசப் (29). இசைக்கலைஞர். இவரது நண்பர் ரிஷிஷா. மும்பையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். எனவே அங்கு சென்ற அவர் மும்பையின் புறநகரான பாந்த்ராவில் புல்லக் ரோட்டில் தனது நண்பருடன் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12-வது மாடியில் தங்கியிருந்தார்.
இன்று காலை 8.30 மணியளவில் ரிஷிஷா மற்றும் நண்பர்களுடன் அறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டின் ஜன்னல் மீது ஏறி கரன் ஜோசப் கீழே குதித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் விரைந்து சென்று அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தற்கொலையின் போது கரன் ஜோசப் குடிபோதையில் இருந்தார்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. புலன் விசாரணைக்காக அவரது செல்போன் தடயவியல் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலம் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.