மேற்கு வங்காளம் மாநிலம் முர்ஷிபாத் மாவட்டத்தில் உள்ள தாயுலாடாபாத் பகுதியில் இருக்கும் பாலிகாத் பாலத்தில் நேற்று சுமார் 50 பயணிகளுடன் சென்ற பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.
சம்பவம் அறிந்து அங்கு வந்த பொதுமக்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டனர். படகுகளை பயன்படுத்தி பயணிகள் மீட்கப்பட்டனர். சிறிது நேரம் கழித்து வந்த தேசிய பேரிடர் மீட்ப்புக் குழுவினர் சடலங்களை மீட்கும் பணியில் இறங்கினர். நேற்று வரை உயிரிழந்த 32 பேரின் உடல் மீட்கப்பட்டது.
மேலும், மாநில போக்குவரத்துத்துறை மந்திரி சுவேந்து ஆதிகாரி மற்றும் செயலாளர் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். இன்றும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. இன்றும் உயிரிழந்த சிலரின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.