செய்திகள்

ராமதாசுக்கு கொலை மிரட்டல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு

முகநூலில் ராமதாசுக்கு கொலை மிரட்டல் வந்தது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை மாவட்ட அமைப்பு செயலாளராக இருப்பவர் ஜெயராமன். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை தொடர்புபடுத்தி, கீற்றுநந்தன் என்ற ரமேஷ் என்பவர் தன்னுடைய முகநூலில் எங்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசுக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்ற தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்பதையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

SCROLL FOR NEXT