முரளிதர ராவ் 
செய்திகள்

பாகிஸ்தான் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக ஸ்டாலின் போராடுகிறார்- முரளிதர ராவ் குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பாகிஸ்தான் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடுவதை ஏற்க முடியாது என்று பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மாலை மலர்

கோவை:

பா.ஜனதாவின் தேசிய பொதுச்செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ் இன்று கோவை வந்தார். விமானநிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமர் மோடியின் ராமர் கோவில் அறக்கட்டளை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறோம். ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டுமென்பது நீண்ட கால கோரிக்கை. இதனால் ஒட்டு மொத்த இந்தியர், உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் ராமர் கோவில் கட்டப்படும்.

அனைத்து இந்திய மொழிகளும் கடவுளிடம் செல்லும் வழியாக உள்ளது. தமிழ், சமஸ்கிருதம் என பிரித்து பார்க்க வேண்டாம். பா.ஜனதா அனைத்து மொழிகளையும் சமமாக பார்க்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடுவதை ஏற்க முடியாது. நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளித்ததை வரவேற்கிறோம்.

அடுத்த ஒரு மாதத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சி.ஏ.ஏ., காஷ்மீர், ராமர் கோவில் குறித்து பா.ஜனதா பிரசாரம் மேற்கொள்ளும். நாட்டில் பொருளாதார மந்த நிலை பலமுறை வந்துள்ளது. பொருளாதார மந்தநிலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிரசாந்த் கிஷோர் வட இந்தியரா, தென் இந்தியரா, திராவிடரா, ஆரியரா என ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். டெல்லி தேர்தலுக்கு பிறகு தமிழக பா.ஜனதா தலைவர் அறிவிக்கப்படுவார். அமைச்சர் ஜெயக்குமார் பா.ஜனதா தலைவர் அல்ல. கூட்டணி கட்சிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கும். அ.தி.மு.க.- பா.ஜனதா இடையே சுமூகமான உறவு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.