மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
மும்பையில் இருந்து பன்வெல் செல்லும் ரெயிலில் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர். குர்லா ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்பதற்குள் ஒரு பெண் பயணி கீழே இறங்க முயன்றார். அப்போது அந்த பெண்ணுக்கு கால் தவறியதால் ரெயில் பெட்டியின் கைப்பிடியை பிடித்து தொங்கினார்.
அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சுதாரித்துக் கொண்ட அவர், சக பயணிகளின் உதவியுடன், அந்தப் பெண்ணை நடைமேடை பகுதிக்கு இழுத்துக் காப்பாற்றினார்.
ரெயிலில் இருந்து கீழே விழ முயன்ற பெண்ணை காப்பாற்றிய பாதுகாப்பு படைவீரருக்கு சக பயணிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Tamilnews