பத்மஸ்ரீ விருது வென்ற முன்னணி பத்திரிக்கையாளரான முசாபர் ஹுசைன் மும்பையில் நேற்று மரணமடைந்தார்.
மும்பையை சேர்ந்த முன்னணி பத்திரிக்கையாளர் முசாபர் ஹுசைன். இவர் கடந்த 1940-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.
பல்வேறு மொழிகளை கற்றுத்தேர்ந்த இவர், இலக்கிய பிரிவில் பல மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்றுள்ளார். கடந்த 2002-ம் ஆண்டு இலக்கியத்துக்காக பத்மஸ்ரீ விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. 78 வயதான ஹுசைன் மும்பையில் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.