இரு அணிகளுக்கு இடையிலான குவாலிபையர்-1 ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் புனே அணியின் கேப்டன் ஸ்மித் ‘ஹெட்’ கேட்டார். ஆனால், ‘டெய்ல்’ விழ, மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார்.
மும்பை அணியில் பார்த்தீவ் பட்டேல், மெக்கிளெனகன், பும்ப்ரா மற்றும் மலிங்கா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். புனே அணியில் பென் ஸ்டோக்ஸ் இல்லாததால் பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:- 1. பார்தீவ் பட்டேல், 2. லென்டில் சிம்மன்ஸ், 3. அம்பதி ராயுடு, 4. பொல்லார்டு, 5. ரோகித் சர்மா, 6. ஹர்திக் பாண்டியா, 7. குருணால் பாண்டியா, 8. கரண் சர்மா, 9. பும்ப்ரா, 10. மலிங்கா, 11. மெக்கிளெனகன்.