மும்பை:
மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே 8 மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களளை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.