கொல்கத்தா :
‘உபேர்‘ கார்களில் பயணம் செய்யும்போது, சில பயணிகள் தங்களது உடைமைகளை மறந்து விட்டுச் செல்வது உண்டு. இவ்வாறு அதிகமான பொருட்களை தவறவிட்டுச் சென்றதில் மும்பை நகரவாசிகள், இந்தியாவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்கள்.
‘உபேர்‘ நிறுவனம் வெளியிட்டு இருக்கும் ஒரு புள்ளி விவரத்தில் இந்த ருசிகர தகவல் இடம்பெற்று இருக்கிறது.
கொல்கத்தா, அலகாபாத் ஆகிய நகரவாசிகள் 2-வது, 3-வது இடங்களில் உள்ளனர். அதனைத் தொடர்ந்து பெங்களூருவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பயணிகள் தவறவிட்ட முக்கிய பொருட்களில் மொபைல்போன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதுதவிர கேமராக்கள், பை, குடை, மாம்பழம், கரடி பொம்மைகள், குழந்தைகளுக்கான சைக்கிள், பணப்பை, சாவி, துணிவகை, செயற்கை பல்செட், மருந்து சீட்டுகள், தேர்வு நோட்டுகள் என்று பட்டியல் நீள்கிறது.
மேலும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பயணிகள் அதிகமாக பொருட்களை தவற விடுகின்றனர். மதியம் 1 மணி முதல் 3 மணிக்குள் உண்ட மயக்கத்தில்தான் இந்த கவனக்குறைவு ஏற்படுவதாகவும் அந்த ருசிகர தகவல் தெரிவிக்கிறது.