முலாயம் சிங் யாதவ் 
செய்திகள்

முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாலை மலர்

லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். இவர் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும்கூட.

இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங்  யாதவ், லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனை மருத்துவ கல்லுரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

வயிற்று வலி காரணமாக முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என மருத்துவமனையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.