மின்சாரம் தாக்கி பலி 
செய்திகள்

மூலனூர் அருகே மின்சாரம் பாய்ந்து பேரூராட்சி ஊழியர் பலி

மூலனூர் அருகே மின்சாரம் பாய்ந்து பேரூராட்சி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலனூர்:

மூலனூர் அருகே உள்ள வஞ்சிவலசை சேர்ந்தவர் ராமசாமி (வயது 40). இவர் மூலனூர் பேரூராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கன்னிவாடியில் உள்ள ஒரு வீட்டிற்கு பியூஸ் போடுவதற்காக மின்கம்பத்தில் ஏறி உள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் இறந்தார்.

இது குறித்து மூலனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று ராமசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சில் ஏற்றினர்.

அப்போது அந்த பகுதி பொதுமக்கள் ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி மின்பழுது தொடர்பாக வேலை செய்ய முறையான ஆட்கள் வருவது இல்லை. எனவே மின்பழுதை ஒழுங்குபடித்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், அப்போதுதான் ஆம்புலன்சை அனுப்புவோம் என்றனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் ராமசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் இது குறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT