விபத்து பலி 
செய்திகள்

மூலனூர் அருகே கார் மோதி முதியவர் பலி

மூலனூர் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

மூலனூர்:

மூலனூர் அருகே உள்ள போளரையை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 62). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்றுகாலை போளரையிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் கரூரிலிருந்து-தாராபுரம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக கந்தசாமியின் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மூலனூர் போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சக்திகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்தில் பலியான கந்தசாமியின் உடல் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.