ஆர்ப்பாட்டம் 
செய்திகள்

மூலனூரில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திராவிட தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மூலனூரில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

மாலை மலர்

மூலனூர்:

புதிய கல்வி கொள்கை மக்கள் விரோத திட்டங்களை திரும்ப பெறக்கோரி திராவிட தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மூலனூரில் பி.எஸ். என்.எல் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

மூலனூர் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட தலைவர் ராமன், மற்றும் தாராபுரம், மூலனூர் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாநில துணை பொதுச்செயலாளர் தாரைஅன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.