செய்திகள்

மேகாலயா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் முகுல் சங்மா

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகுல் சங்மா இன்று மேகாலயா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை கவர்னர் கங்கா பிரசாத்திடம் அவர் ஒப்படைத்தார். #MukulSangma #resignation #meghalayachiefminister

ஷில்லாங்:

சமீபத்தில் நடந்து முடிந்து மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான 31 உறுப்பினர்கள் என்னும் பெரும்பான்மையை பெறாவிட்டாலும் அதிகபட்சமாக 21 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயன்றுவரும் அதேவேளையில், சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுடன் பேசி கூட்டணி அமைக்க பா.ஜ.க.வும் தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.

இந்நிலையில், இன்று பிற்பகல் ஷில்லாங் நகரில் உள்ள ராஜ் பவனுக்கு சென்ற முதல் மந்திரி முகுல் சங்மா தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் கங்கா பிரசாத்திடம் ஒப்படைத்தார். #tamilnews #MukulSangma #resignation #meghalayachiefminister

SCROLL FOR NEXT