புதுடெல்லி:
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.
இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ சிம்மை ஏராளமான சலுகைகளுடன் அறிமுகம் செய்தார். 'ரிலையன்ஸ் ஜியோ தொடங்கிய 17௦ நாட்களில் 10 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்தனர். இதனால் அவரது பெயர் இந்தியா முழுவதும் பரவியது. மேலும் இதனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு கட்டணங்களை குறைக்கக் தொடங்கின.
இந்நிலையில், ஆசிய பணக்கார குடும்பங்களின் புதிய பட்டியலை போர்பஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் முகேஷ் அம்பானியின் குடும்பம் முதலிடத்தை பிடித்துள்ளது. முகேஷ் அம்பானி குடும்பத்தில் சொத்து மதிப்பு 2 லட்சத்து 92 ஆயிரத்து 140 கோடி ரூபாய் (44.8 பில்லியன் டாலர்) ஆகும். இது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சொத்துமதிப்பை விட 1 லட்சத்து 23 ஆயிரத்து 899 கோடி ரூபாய் அதிகமாகும்.
சாம்சங் குழுமத்தின் லீ குடும்பம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 56 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஹாங்காங்கின் குவாக் குடும்பம் மூன்றாவது இடத்திலும், தாய்லாந்தின் சியாராவனோண்ட் குடும்பம் நான்காவது இடத்திலும் உள்ளன.
லீ குடும்பம் சாம்சங்
முகேஷ் அம்பானியின் குடும்பத்தை தவிர வேறு எந்த இந்திய குடும்பமும் முதல் 10 இடத்திற்குள் இடம்பிடிக்கவில்லை.
பிரேம்ஜி குடும்பம் 11-வது இடத்திலும், ஹிந்துஜா குடும்பம் 12-வது இடத்திலம், மித்தல் குடும்பம் 14-வது இடத்திலும், மிஸ்திரிஸ் குடும்பம் 16-வது இடத்திலும், பிர்லா குடும்பம் 19-வது இடத்திலும் உள்ளன. ஆசியாவின் டாப் 50 பணக்கார குடும்பங்கள் பட்டியலில் 18 இந்திய குடும்பங்கள் இடம்பிடித்துள்ளன.
சமீபத்தில் வெளியிடப்பட்ட போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 14-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸிம் பிரேம்ஜி (விப்ரோ)