செய்திகள்

400மீ ஓட்டம்- நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார் கேரள வாலிபர்

காமன்வெல்த் போட்டியில் கேரளாவின் முகமது அனாஸ் யாஹியா 400 மீட்டர் ஓட்டத்தில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். #CWG2018 #GC2018

முகமது அனாஸ் தகுதிச் சுற்றின் முடிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் போட்ஸ்வானாவின் இரண்டு வீரர்கள், ஜமைக்காவின் மூன்று வீரர்கள், ஆஸ்திரேலியா மற்றும் கிரேனாடா வீரர்களுடன் முகமது அனாஸும் பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்தினார்.

விசில் அடித்ததும் வீரர்கள் சிட்டாக பறந்தனர். போட்ஸ்வானா வீரரர்கள் ஐசாக் மக்வாலா, பபோலோகி தேபே முறையாக தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை பெற்றனர்.