‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டியில், விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-1, 6-1 என்ற நேர் செட்டில் மக்டலெனா ரைபரிகோவாவை (ஸ்லோவெகியா) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் மரியா சக்காரி (கிரீஸ்) பந்தாடியதுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றையும் உறுதி செய்தனர்.