முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாக்குளத்தை சேர்ந்த வழிவிட்டான் மகன் வசந்தகுமார் (வயது15). இவர் முதுகுளத்தூரில் வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கிவிட்டு, மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். கடலாடி விலக்கு ரோட்டருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், எதிரே நின்ற சரக்கு வாகனம் மீது, வசந்தகுமார் சென்ற மொபட் மோதியது. அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், வசந்த குமாரை மீட்டு, முதுகுளத்தூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் பலியானார். இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிலீப் (பொறுப்பு), வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
குறுகலாக உள்ள முதுகுளத்தூர் கடலாடி செல்லும் சாலையில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு, இதுவரையில் 10 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். புறவழிச்சாலை அமைக்க 2013 ல், 5.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், பணிகள் தொடங்கப்படாததால், கடலாடி விலக்கு ரோட்டில், வாகன பெருக்கத்தால், விபத்துக்கள் நடப்பது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.