பிசிசிஐ-யால் நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி இடம் பிடித்திருந்தது. அந்த அணியில் கேப்டனாக டோனி தொடர்ந்து செயல்பட்டு வந்தார். மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால் 2016 மற்றும் 2017 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடாத வகையில், அந்த அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
ஐ.பி.எல். தொடரில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை நேற்றோடு முடிவுக்கு வந்தது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. விளையாடுவதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.
மீண்டும் சி.எஸ்.கே. அணியில் டோனி, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா, பிராவோ போன்ற ஜாம்பவான்கள் இடம்பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் நான் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத்தான் விளையாட இருக்கிறேன் என்பதை டோனி இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை வெளியிட்டு சூசகமாக தெரிவித்துள்ளார்.
அந்த படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி நிறமான மஞ்சள் நிறத்தில் டோனி ஜெர்சி அணிந்துள்ளார். அதில் 7 என்ற நம்பருக்கு கீழ் ‘THALA (தலைவர்)’ எழுதப்பட்டுள்ளது. ‘எங்கள் தல டோனிக்கு பெரிய விசில் அடிங்க’ என்ற சென்னை அணிக்கு தீம் மியூசிக் உள்ளது. இதனால் மீண்டும் கேப்டனாக களம் இறங்க இருக்கிறார் என்பதை வெளிக்காட்டும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.