செய்திகள்

ஆலோசனை கூட்டத்தின் முடிவு அ.தி.மு.க.வில் ஒற்றுமையை ஏற்படுத்தும்: எம்.பி. வைத்திலிங்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அ.தி.மு.க.வில் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்று எம்.பி. வைத்திலிங்கம் கூறினார்.

மாலை மலர்

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அனைத்து நிர்வாகிகளும் அமர்ந்திருக்க அமைப்பு செயலாளரும், செய்தி தொடர்பாளருமான எம்.பி. வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் வழிகாட்டுதலின் படி இன்று நடைபெற்ற புரட்சித் தலைவி அம்மா அவர்களால் நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை உங்களிடம் (பத்திரிகையாளர்கள்) கொடுக்கிறோம்.

தற்போது எடுத்திருக்கும் இந்த முடிவுகள் கட்சிக்குள் ஒற்றுமையை உருவாக்கும்.

கேள்வி:- இரு அணிகளின் இணைப்பு எப்போது நடைபெறும்?

பதில்:- விரைவில் இணையும் என்று நம்புகிறேன். எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.