செய்திகள்

பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய விவகாரம்: 15 பேர் மீதான தேசவிரோத வழக்கு வாபஸ்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்ற பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய விவகாரத்தில், 15 பேர் மீதான தேச விரோத வழக்கை அம்மாநில போலீசார் வாபஸ் பெற்றனர்.

மாலை மலர்

போபால்: 

கடந்த 18ஆம் தேதி சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற பாகிஸ்தானுக்கு ஆதரவாக மத்தியபிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியில் சிலர் கோஷங்களை எழுப்பியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். 

இதனையடுத்து, பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியதாக 15 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். பின்னர் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக கூறி 15 பேர் மீதும் தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது. 15 பேரும் பர்கன்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படு, பின்னர் கந்த்வா சிறைக்கு அனுப்பப்பட்டனர். 

இருப்பினும் முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் யாரும் குற்றப்பின்னணி உடையவர்கள் அல்ல என்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கு வகையில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்று விளக்கம் அளித்தனர். அதேபோல் மத்திய மாநில மனித உரிமை ஆணையத்திற்கும் சென்று தங்களது தரப்பு நிலையை எடுத்துக் கூறினர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடிய விவகாரத்தில், 15 பேர் மீதான தேச விரோத வழக்கை அம்மாநில போலீசார் வாபஸ் பெற்றனர்.