செய்திகள்

மலேசியாவில் அதிகபட்ச சரக்கு - சேவை வரி 6 சதவீதம்தான்: எம்.பி.டத்தோ மோகன் தகவல்

மலேசியாவில் அனைத்து வகையான பொருட்களுக்கும் அதிகபட்ச சரக்கு சேவை மற்றும் வரி 6 சதவீதம் தான் என்று மலேசிய நாட்டின் எம்.பி. டத்தோ மோகன் திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூறினார்.

மாலை மலர்

திருச்சி:

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசிய நாட்டின் எம்.பி. டத்தோ மோகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுற்றுலா பயணிகள் விரும்பும் அனைத்தும் மலேசியாவில் கிடைக்கிறது என்பதால் தான் அங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகிறார்கள். மலேசியாவில் இந்தியர்கள் 25 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் தமிழர்கள். மலேசியாவில் மலாய் தான் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழி என்றாலும் தமிழும் ஆட்சி அதிகாரத்தில் அனைத்து பங்கினையும் பெற்று வருகிறது.

530 தமிழ் பள்ளிகள் அங்கு இயங்கி வருகின்றன. அரசால் நடத்தப்படும் இந்த பள்ளிகள் அனைத்தும் பல்கலைக்கழகங்கள் போல் நவீன வசதிகளுடன் உள்ளன. தமிழகம் மற்றும் இலங்கை நாட்டை தவிர வேறு எந்த வெளிநாட்டிலும் இவ்வளவு அதிகமாக தமிழ் பள்ளிகள் கிடையாது.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை மலேசியாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பே அமலுக்கு வந்து விட்டது. அங்கு கல்வி, மருத்துவம், அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு சேவை வரி கிடையாது. மற்றபடி அனைத்து வகையான பொருட்களுக்கும் அதிகபட்ச சரக்கு சேவை மற்றும் வரி 6 சதவீதம் தான். இந்தியாவில் 28 சதவீதம் வரை சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்ட போது மலேசிய மக்கள் நமது நாடு பரவாயில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.