முசாபர்நகர்:
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்தபாபாத் பஞ்செண்டா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அப்போது உணவில் எலி செத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் ஒருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்களை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.