விபத்து 
செய்திகள்

திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

திருவாரூர்:

கொரடாச்சேரி முகுந்தனூரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 50). இவர் திருவாரூரில் உள்ள ஒரு மளிகை கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

முகந்தனூர் அருகே சென்றபோது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த பாண்டியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் பாண்டியனை மீட்டு திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பாண்டியன் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக பாண்டியனின் மனைவி மஞ்சுளா கொரடாச்சேரி போலீசில் அளித்த புகாரின் பேரில் பத்தூரைச் சேர்ந்த குரு என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.