புதுடெல்லி:
மோட்டோரோலா இந்த ஆண்டு வெளியிட இருக்கும் மோட்டோ எக்ஸ் (2017) சார்ந்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் மோட்டோ எக்ஸ் (2017) மோட்டோ எக்ஸ் 4 என அழைக்கப்படும் என தெரிவிக்கின்றன. இதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் இணையத்தில் கசந்துள்ளது.
அதன் படி மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டா கோர் சிப்செட், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 3800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகின்றது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், கைரேகை ஸ்கேனர் வசதி, IP68 சான்று பெற்ற வாட்டர் டஸ்ட் ப்ரூஃப் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க இரட்டை 13 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் செலஃபி கேமரா லென்ஸ் குறித்து எவ்வித தகவலும் இல்லை. மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர மோட்டோ மாட்ஸ் அக்சஸரீகளும் வழங்கப்படும் என்றும் மோட்டோ எக்ஸ் 4 பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வரை மோட்டோ எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.