பொன்னமராவதி:
திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருந்து தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவர் பணியாற்றும் சடையம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இது குறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.