செய்திகள்

துடியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தலைமை ஆசிரியர் பலி

கோவை துடியலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

கோவை துடியலூர் அருகே உள்ள பழனி கவுண்டன் புதூர் ராமகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் பகத் சிங் (58). இவர் இடிகரை அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று இரவு பகத் சிங் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றார். 

அப்போது எதிரே 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அதி வேகமாக வந்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பகத் சிங் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த பகத் சிங்கை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

பகத்சிங் மீது மோதிய மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்களை துடியலூர் போலீசார் தேடி வருகிறார்கள்.