விபத்து 
செய்திகள்

பாச்சலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி

திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் அருகே உள்ள பெரியூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மங்களம் (வயது 71). இவரும், அதே பகுதியை சேர்ந்த திருமுருகன் (55) என்பவரும் மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தேவத்தூர் வந்தனர். பின்னர் அவர்கள், தங்களது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை திருமுருகன் ஓட்டினார். பின்னால் மங்களம் அமர்ந்து இருந்தார்.

ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலையில், மின்மயானம் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது கோவையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மங்களம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த திருமுருகனுக்கு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT