செய்திகள்

ஏம்பலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலி

ஏம்பலத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் இறந்து போனார்.

வில்லியனூர்:

வில்லியனூர் அருகே ஏம்பலம் பாலாஜி நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 30). பெயிண்டர். இவர் நேற்று இரவு சொந்த வேலையாக கரிக்கலாம்பாக்கம் சென்று விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

ஏம்பலம் 4 முனை சந்திப்பில் வளைவில் சாலையை கடந்த போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட அசோக்குமார் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அசோக்குமாரை மீட்டு மோதிய காரிலேயே கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் கள் அசோக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசங்கர் வல்லட், சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார் மோதி பலியான அசோக்குமாருக்கு திருமணமாகி சந்திரா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT