விபத்து 
செய்திகள்

சேத்துப்பட்டு அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவர் கார் மோதி பலி

சேத்துப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டை அடுத்த ராந்தம் கிராமத்தைச் சேர்ந்த ராமுலு (வயது 61) விவசாயி. இவர் நேற்று முன்தினம் ஆரணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். ராந்தம் கூட்ரோடு அருகே வந்தபோது சேத்துப்பட்டில் இருந்து அதிவேகமாக வந்த ஒரு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ராமுலுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமுலு இறந்து விட்டார்.

இது குறித்து அவரது மகன் சரவணன் சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டி வந்த டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.