விபத்து 
செய்திகள்

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கூலித்தொழிலாளி பலி

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்த கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

நெல்லை:

விருதுநகர் மாவட்டம் சங்கரபாண்டியபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்சாமி. இவரது மகன் பெருமாள் ராஜ்குமார் (வயது 25), கூலித்தொழிலாளி. இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குடியில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி ரோட்டில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.