செய்திகள்

முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

முத்துப்பேட்டை அருகே ரோட்டை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காட்டை சேர்ந்த நாகப்பன் மனைவி மாரியம்மாள் (வயது60). இவர் நேற்று மாலை முத்துப்பேட்டை கடைத் தெருவுக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

அவர் ஆலங்காடு படித்துறை பகுதியில் ரோட்டை கடந்து சென்ற போது வெங்கடேஷ் என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மாரியம்மாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

இந்த விபத்து குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

SCROLL FOR NEXT