செய்திகள்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் பார்க்கிங் கட்டணம் ரூ.500 ஆக உயர்வு

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாதாந்திர இருசக்கர பார்க்கிங் கட்டணம் ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மாலை மலர்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனங்களை பார்க்கிங் செய்ய பொது மக்கள் இடையே தேவை அதிகரித்துள்ளது. ஒரு சில இடங்களில் பயணம் செய்யாதவர்கள் கூட நிறுத்துவதற்கு அனுமதி கேட்கின்றனர்.

வியாபாரிகள், தொழில் முனைவோர்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை நிறுத்தி எடுத்து செல்வதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடங்களை சிலர் அனுமதி இன்றியும், பலர் அனுமதியோடும் பயன்படுத்தி வருகின்றனர்.

இது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, அசோக்நகர், கிண்டி, மண்ணடி, நங்கநல்லூர் ரோடு, மீனம்பாக்கம் ஆகிய நிலையங்களில் தேவை அதிகரித்ததையடுத்து கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.