சான்பிரான்சிஸ்கோ:
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ4 மற்றும் இ4 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை இம்மாத இறுதியில் இந்திய சந்தைகளில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த பேட்டரி பேக்கப், மேம்படுத்தப்பட்ட கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டோ இ4 ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ இ3 ஸ்மார்ட்போன்களின்
மேம்படடுத்தப்பட்ட மாடல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய மோட்டோ இ4 ஸ்மார்ட்போன்களின் பேட்டரி, கேமரா மற்றும் டிஸ்ப்ளேக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ இ4 மற்றும் இ4 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ஜூன் 22-ந்தேதி முதல் அமேசான் பிரைம் மூலம் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோ இ4 சிறப்பம்சங்கள்:
* 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 720x1280 பிக்சல் ரெசல்யூஷன்
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
* 8 எம்பி பிரைமரி கேமரா
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 2800 எம்ஏச் பேட்டரி
மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் ஃபைன் கோல்டு மற்றும் லிகோரைஸ் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 129.99 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.8,378 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மோட்டோ இ4 ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
மோட்டோ இ4 பிளஸ் சிறப்பம்சங்கள்:
* 5.5 இன்ச் எச்டி, 720x1280 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
* 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 425 பிராசஸர்
* 5000 எம்ஏஎச் பேட்டரி
* 13 எம்பி பிரைமரி கேமரா
* 5 எம்பி செல்ஃபி கேமரா
* ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம்
* 2 ஜிபி ரேம்
* 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
மோட்டோ இ4 பிளஸ் ஐயன் கிரே, ஆக்ஸ்ஃபோர்டு ப்ளூ மற்றும் பிளஷ் கோல்டு என மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் 179.99 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.11,600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 22-ந்தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ இ4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்ற சந்தைகளில் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.