தற்கொலை 
செய்திகள்

பாலக்காட்டில் மகன், மகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை

பாலக்காட்டில் மகன் மற்றும் மகளை கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு ஆலத்தூர் அருகே உள்ள சேரமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி உஷா (வயது 40). தேயிலை தோட்ட தொழிலாளர்கள்.

இவர்களது மகள் அனுஸ்ரீ (14), மகன் அபிஜித் (12). ராஜேந்திரன் தேயிலை தோட்டம் உள்ள நெல்லியாம்பதியில் தங்கினார். உஷா, குழந்தைகளுடன் சேரம்பாடியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை உஷா வீட்டில் இருந்து கரும்புகையுடன் கருகிய வாடை வீசியது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது 3 பேரும் உடல் கருகி இறந்து கிடந்தனர்.

ஆலத்தூர் டி.எஸ்.பி. தேவசி மற்றும் ஆலத்தூர் தாசில்தார் ஜெய்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் மகள், மகன் மீது மண்எண்ணை தீ வைத்து கொன்று பின்னர் தானும் மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டது தெரியவருவதாக போலீசார் கூறினர்.