செய்திகள்

மாமியார்-மருமகள் கொலை: கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை வேட்டை

செங்கத்தில் மாமியார் மற்றும் மருமகள் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

செங்கம்:

செங்கம் பக்கிரிபாளையம் கிராமத்தில் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் ஓட்டு வீட்டில் அஸ்மத்பீ (வயது 80) மற்றும் அவரது மருமகள் தில்ஷாத் (49) ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு மாமியாரும், மருமகளும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டு மேல் ஏறிய மர்ம கும்பல், ஓடுகளை அகற்றி விட்டு வீட்டுக்குள் இறங்கினர். அஸ்மத்பீயையும், தில்ஷாத்தையும் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்தனர்.

இச்சம்பவம் குறித்து, செங்கம் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், 4 தனிப்படைகள் அமைக்கட்டும் கொலை கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.