கேரளா நிலச்சரிவில் மீட்புப் பணியினர் 
செய்திகள்

கேரளா நிலச்சரிவு: ஒரு வயது மகனை இறுகப் பற்றியபடி உயிரிழந்த தாய்

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தாய், தனது ஒரு வயது மகனை இறுகப்பற்றிக் கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் கேரள மாநிலம் பலத்த சேதத்தை சந்தித்து உள்ளது.

வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மலப்புரம் அருகே மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதிர்ச்சி அளிக்கும் காட்சி ஒன்றை கண்டுள்ளனர். மலப்புரத்தின் சாத்தக்குளம் பகுதியில் வசித்தவர் கீது(21).