தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும், 360 டிகிரி என அழைக்கபடுபவரும் ஆன டிவில்லியர்சின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 104 பந்தில் 176 ரன் குவித்தார். இதில் 15 பவுண்டரிகள், 7 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர்களின் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தார். கேரி கிர்ஸ்டன் 188 ரன்களுடனும் முதல் இடத்திலும், டு பிளிசிஸ் 185 ரன்களுடன் 2-வது இடத்திலும், டி காக் 178 ரன்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். கிப்ஸ் 175 ரன்கள் குவித்துள்ளார்.
பின்னர் விளையாடிய வங்காளதேசம் 47.5 ஓவர்களில் 249 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 104 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை வென்றது. டிவில்லயர்ஸ் நேற்று 7 சிக்சர் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் 200-வது சிக்சர்களை கடந்துள்ளார். 201 சிக்சர்கள் விளாசியுள்ள டி வில்லியர்ஸ், அதிக சிக்சர்கள் விளாசியடி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார்.